காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 9 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
HIGHLIGHTS

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டனர்.
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் 9 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 9பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சன் (31) என்பவரும் உயிரிழந்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்தில் படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்களுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிவிபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.