/* */

3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்

3 வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்

HIGHLIGHTS

3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக-பாஜக.வைத் தவிர்த்து மற்ற கட்சிகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. ஆனால்,அதிமுக- பாஜக உறுப்பினர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு எதிராக ஏற்கனவே 6 சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு மாநில அரசுப்பட்டியலில் உள்ளிட்டவற்றை படிப்படியாக அபகரித்து வருகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு நிறை வேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட் டப்பேரவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுதீர்மானம்கொண்டு வந்தார். வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டியது ஏன் என்பது தொடர்பாக தர்க்க ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாதங்களை அடுக்கினார்.

இந்த தீர்மானத்தை ஆதரித்து பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் பேசியதாவது: விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண்சட்டங்கள் உள்ளன, விவசாயிகளின் வேதனையை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. எல்.ஏக்களும், பா.ஜ.க. எல்.ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வெளிநடப்பு செய்தனர். எனினும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டம் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, தமிழகத்தில் அந்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக ஆட்சியின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Updated On: 28 Aug 2021 9:03 AM GMT

Related News