/* */

குமுதம் எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு...

அண்ணாமலை ஆசிரியராக இருந்து நிறுவிய குமுதம்.

HIGHLIGHTS

குமுதம் எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு...
X

குமுதம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மனைவியும் குமுதம் இயக்குநர்களில் ஒருவருமாக இருந்த திருமதி.கோதை அண்ணாமலை இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்

1947ஆம் வருடம் அவரது கணவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆசிரியராக இருந்து நிறுவிய குமுதம் இதழின் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலங்களிலிருந்து இறுதிவரை உறுதுணையாக இருந்தவர். எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

1994ல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றார். அவருக்கும் குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவர் திருமதி. கோதை ஆச்சி என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி கோதை ஆச்சிக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள்.கோதை ஆச்சியின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபலமான இதய நோய் சிகிச்சை மருத்துவராக இருக்கிறார். தந்தையின் கனவுகள் மெய்ப்பட குமுதம் பணிகளையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார், மகள் விஜயலட்சுமி அழகப்பன் மைசூரில் வசிக்கிறார்.மற்றொரு மகள் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கிருஷ்ணா சிதம்பரம் சென்னையில் வசிக்கிறார்.

Updated On: 10 May 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்