/* */

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சற்று முன் காலமானார்..!

உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார்.

HIGHLIGHTS

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சற்று முன் காலமானார்..!
X

கடந்த மூன்று தினங்களாக மூச்சுத்திணறல் ஏற்பாட்டுவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மியோட மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் சரியாக 9 மணிக்கு அவர் காலமானதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

பிறப்பு, இளமைப்பருவம்:

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி என்பது ஆகும். படிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லாததால் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து முடித்தார்.

அதன் பின்னர் கீரைத்துரையில் தனது தந்தை வைத்திருந்த அரிசி ஆலையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். சின்ன வயதிலேயே விஜயகாந்திற்கு சினிமா மீது அதிக ஆர்வம் உண்டு. இதனால் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார்.

1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கண்ணையா – அம்சவேணி தம்பதியின் மகளான பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விஜயகாந்திற்கு விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

திரைப்பயணம்:

அவமானங்கள், புறக்கணிப்புகள் என பல கஷ்டகளையும் கடந்து 1979-ம் ஆண்டு வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் இயக்குநரான எம்.ஏ.காஜா, விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றினார். `சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `அம்மன்கோவில் கிழக்காலே’, `உழவன் மகன்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம் வந்தார்.

1984ம் ஆண்டு மட்டும் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கிட்டத்தட்ட 156-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்துக்கு, 1991 ஆம் ஆண்டில் கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழி கிடைக்க காரணமாக அமைந்தது.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, விஜயகாந்த் யாராலும் முடியாது என நினைத்துக் கொண்டிருந்த நடிகர் சங்கத்தின் கடனை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலை விழா நடத்தி அடைத்தார். அதனையடுத்து 2002ம் ஆண்டு திரைப்பிரபலங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்.

அரசியல் பயணம்:

1978 ஆம் ஆண்டு தென் இந்திய தலைமை ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு அகில இந்திய தலைமை ரசிகர்மன்றமாக மாற்றப்பட்டது. 1982ம் ஆண்டு விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ என அறிவித்தார். 1985 ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்டார். அதன் பின்னர் 2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்திற்கு என தனிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அன்று முதல் விஜயகாந்த் தீவிர அரசியலில் இறங்குவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். எனவே 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினர். அதன் பின்னர் விஜயகாந்த் நடித்த படங்களில் அரசியல் நொடி அதிகமுள்ள வசனங்கள் இடம் பெற்றன. இதனால் அரசியல் தலைவர்களின் பார்வை விஜயகாந்த் பக்கம் திரும்பியது, குறிப்பாக ராமதாஸுக்கும் இவருக்கும் இடையே வெளிப்படையான வார்த்தை யுத்தமே வெடித்தது.

இதனையடுத்து புதிய கட்சியை ஆரம்பிக்க முடிவெடுத்த விஜயகாந்த் 2005ம் ஆண்டு திருவண்ணாமலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதே ஆண்டு ஈரோடு வ.உ.சி. பூங்கா திடலில் வெள்ளக்கோவிலில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நகரில் நடந்த 150 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கும் விழாவில் மாநாட்டு தேதி மற்றும் இடத்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி, “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது எம்.ஜி.ஆரின் துணைவியாரான ஜானகி அம்மாள், விஜயகாந்திற்க்கு வழங்கிய, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

கொடை வள்ளல் குணம்:

கேப்டன் விஜயகாந்த் தீவிர அரசியலில் இறங்குவதற்கு முன்பாகவே மதுரை மற்றும் சென்னையில் இலவச மருத்துவமனை, பள்ளி மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர் காது கேளாதோர்-வாய் பேசாதோர் பள்ளி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இலவச கணினிப் பயிற்சி மையம், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் என பல நற்பணிகளைச் செய்து வந்தார்.

அதுமட்டுமின்றி குஜராத் பூகம்பம், சுனாமி, தானே புயல், ஒடிசா வெள்ளம் என பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு தனது சொந்த பணத்தை லட்சக்கணக்கில் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

1984-ல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரம் இருந்த விஜயகாந்த் அதன் பின்னர் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 1989 ம் ஆண்டு மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

Updated On: 29 Dec 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!