/* */

பத்திரப் பதிவில் இனி இது கட்டாயம்.. புதிய நடைமுறை அமல்

நிலப் பத்திரப் பதிவில் இனி இது கட்டாயம் எனவும் இந்த புதிய நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் அமலானது.

HIGHLIGHTS

பத்திரப் பதிவில் இனி இது கட்டாயம்.. புதிய நடைமுறை அமல்
X

பைல் படம்.

தமிழக பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கும் வகையில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதிவுக்கு வரும் சொத்துக்கள் குறித்த புகைப்படங்களை ஆவணமாக இணைக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக பதிவுத் துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுத்து வருவாயை அதிகரிக்க அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பத்திரப்பதிவின்போது, காலியிடம் அல்லது கட்டிடம் ஆகியவற்றுக்கான பதிவுக்கட்டணம் வேறுபாடு ஏற்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

நிலம் வாங்கி பத்திரப் பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும், புவியியல் விவரங்களும் இடம் பெறுவது கட்டாயம் என தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது.

நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப் பதிவு செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் அக்.1, 2023 ) முதல் அமலுக்கு வருகிறது . இதுநாள் வரை சொத்துகளைப் பதிவு செய்யும் போது நிலம், வீடுகளின் புகைப்படம் சேர்ப்பது இல்லை.

இதனால் வீடுகளைப் பத்திரப்பதிவு செய்யும் போது காலி மனை என்று கூறி பதிவு செய்கிறார்கள். இதனால் ஏற்படும் கோடிக்கணக்கான வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையில் அக்.1-ம் தேதி முதல் நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப் பதிவு துறை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருகிறது.

தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை நிலங்களின் புகைப்படங்களை சேர்ப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மற்றும் முறைகேடுகளை தவிர்க்க இந்த நடைமுறை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு வரும்போது சொத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சொத்தில் உள்ள கட்டடங்கள் போன்றவற்றிக்கு முழுமையான முத்திரரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தும் படி செய்வதற்கான நடவடிக்கையே இந்த புதிய நடவடிக்கை ஆகும்.

வருவாயை பெருக்கும் நோக்கத்துடன் அரசு முடிவு செய்துள்ளது. பத்திரப்பதிவு நிலப் படத்தை சார் பதிவாளரிடம் கொடுத்தால் அவர் எவ்வாறு ஆவணங்களை எழுத வேண்டும் என்று வழிகாட்டுவார்.

பதிவுத் செய்யும் போது சொத்தில் உள்ள அனைத்து விவரங்களும் ஆவணத்தோடு சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளாதா என்பதைப் பார்ப்பதுடன் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர். மனை அல்லது வீடுகளை சேர்க்கும் நடைமுறை அனைத்து சார்-பதிவாளர் அலுவலங்களிலும் பின்பற்றப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Oct 2023 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்