/* */

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யை கைது செய்ய ஆதி திராவிடர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை..

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கைது செய்யுமாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யை கைது செய்ய ஆதி திராவிடர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை..
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவரின், நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலியிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பரமானந்தம் நிலத்தின் ஒரு பகுதியை போலி ஆவணத்தின் மூலம் சிலர் பெயர் மாற்றம் செய்தனராம்.

இந்த நிலையில், தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமானந்தம் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனு மீதஉ நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் பரமானந்தம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

அதாவது, சிவந்திப்பட்டியில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரமானந்தம் தாக்கல் செய்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சம்பந்தமான அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 10.06.2022 அன்று அறிவிக்கை (Notice) அனுப்பப்பட்டது.

பலமுறை அறிவுறுத்தியும் ஆஜராகாததால், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டம், 2021 பிரிவு 9 இன் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு ரூ. 500 (ரூபாய் ஐநூறு மட்டும்) அபராதம் விதித்து ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், மாவட்ட கண்காணிப்பாளரைக் கைது செய்து, ஆணையத்தின் முன் விசாரணைக்கு 28.12.2022 அன்று ஆஜர்படுத்துமாறு பிணையில் விடக்கூடிய (Bailable warrant) பிடி ஆணை தென் மண்டல காவல் துறை தலைவருக்கு (Inspector General of Police, South Zone) அனுப்ப உத்தரவிடப்பட்டது.

கைது உத்தரவுக்கு தடை:

அந்த உத்தரவுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவரது சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காவல் கண்காணிப்பாளருக்கு பதிலாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கி இருந்ததாகவும் தெரிவித்த அவர், முதலில் மிரட்டும் வகையில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னர் தான் வாரண்ட் உத்தர பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

வழக்கறிஞர் ராஜ் திலக் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி சந்திரசேகரன், திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு எதிரான கைது உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Updated On: 20 Dec 2022 4:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!