/* */

கால்நடைகள் வளர்ப்பு, தீவன உற்பத்திக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் வளர்ப்பு, தீவன உற்பத்திக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

கால்நடைகள் வளர்ப்பு, தீவன உற்பத்திக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்
X

பைல் படம்.

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில்முனைவோர் மேம்பாடு, இறைச்சி, முட்டை, ஆட்டுப்பால் மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரித்தல், நாட்டின கால்நடைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. புறக்கடை கோழி வளாப்பின் மூலம் தொழில் முனைவோரை உருவாக்குதல்

தகுதியான நபர்கள் / நிறுவனங்கள் குறைந்த பட்சம் 1000 தாய் முட்டைக் கோழிகள் கொண்ட தாய் கோழி பண்ணை கிராமப்புற குஞ்சு பொறிப்பகம் மற்றும் குஞ்சு பருவம் உடன் இணைந்த தாய்க் கோழி கொட்டகை ஆகியவற்றை நிறுவ வேண்டும்.

கோழி இனங்கள் குறைந்த உள்ளீட்டு தொழில்நுட்ப பறவைகளாகவோ அல்லது திறந்த வெளி வளர்ப்பு அமைப்பில் பராமரிக்கப்படும் பறவைகளாகவோ இருக்க வேண்டும்.

தாய் கோழி கொட்டகை 3000 சதுரடி பரப்பளவிலும், குஞ்சு பொறிப்பக கட்டடம் 3000 சதுரடி பரப்பளவிலும், குஞ்சு பருவம் உடன் இணைந்த தாய்க்கோழி கொட்டகை 4000 சதுரடி பரப்பளவிலும் நிறுவ வேண்டும். மானியம் - 25 இலட்சம் - இரண்டு தவணைகளில் வழங்கப்படும்

2. சிறய அசையூன் பிராணிகள் (Small ruminant) வார்ப்பின் மூலம் தொழில் முனைவோரை உருவாக்குதல் (செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வளர்ப்பு).

தகுதியான நபர்கள் / நிறுவனங்கள் குறைந்த பட்சம் 500 பெண் ஆடுகள் மற்றும் 25 ஆண் ஆடுகளுடன் செம்மறி / வெள்ளாட்டு இனப்பெருக்க நிலையத்தை நிறுவன வேண்டும்.

ஆட்டுப்பால், இறைச்சி மற்றும் சிறந்த தரத்திலான கம்பளி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உயர் மரபணு வகைகளுடனான நாட்டின ஆடுகளின் மூலம் பண்ணையை நிறுவ வேண்டும்.

ஆட்டுக்கொட்டகை 5500 சதுரடி பரப்பளவிலும், ஆட்டுக் குட்டிகளின் கொட்டகை 3500 சதுரடி பரப்பளவிலும் நிறுவுவதோடு, தீவன உற்பத்திக்கென 5 ஏக்கர் நிலமும் வைத்திருக்க வேண்டும். மானியம் - 50 இலட்சம் - இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

3. பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை உருவாக்குதல்

தகுதியான நபர்கள்/நிறுவனங்கள் குறைந்த பட்சம் 100 பெண் பன்றிகள் மற்றும் 10 ஆண் பன்றிகளை கொண்ட இனப்பெருக்க பண்ணையை நிறுவ வேண்டும்.

பெண் பன்றிகளின் கொட்டகை 2000 சதுரடி பரப்பளவிலும், ஆண் பன்றிகளின் கொட்டகை 700 அடி சதுரடி பரப்பளிவிலும், பிரசவிக்கும் பெண் பன்றிகளின் கொட்டகை 4000 சதுரடி பரப்பளவிலும், பன்றிக் குட்டிகளின் கொட்டகை 30,000 சதுரடி பரப்பளிலும் நிறு வேண்டும். மானியம் - 30 இலட்சம் - இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

4. தீவன உற்பத்தியில் தொழில் முனைவோரை உருவாக்குதல்

தகுதியான நபர்கள் / நிறுவனங்கள் உலர்புல், ஊறுகாய் புல், மொத்தக் கலப்புத் தீவனம் (TMR), தீவனத் தொகுதி மற்றும் தீவன சேமிப்பு போன்ற மதிப்புக் கூட்டலுக்கு ஊக்கமளிக்கப்படும்.

அறுவடை இயந்திரம், மின்சக்தியால் இயங்கும் புல் நறுக்கும் கருவி, இயந்திரங்களை சேமித்து வைக்கும் கிடங்கு, மொத்தக் கலப்புக் தீவனம் உற்பத்தி செய்யும் இயந்திரம், மின் இயற்றி (Genset) மற்றும் மூலப் பொருட்களை சேமித்து வைக்க 2000 சதுரடி பரப்பளவில் சேமிப்பு கிடங்கு முதலியவற்றை நிறுவ வேண்டும். மானியம் - 50 இலட்சம் - இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

தகுதியான நிறுவனங்கள்

தனிநபர்கள், விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்கள் (FPO), சுய உதவிக் குழுக்கள் (SHG), கூட்டுப் பொறுப்பு குழுக்கள் (JLG), பிரிவு 8 கீழ் பதிவுபெற்ற நிறுவனங்கள்.

தொழில் முனைவொருக்கான தகுதிகள்

தகுதியான நபர்கள் / நிறுவனங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற்ற நிபுணர்களை கொண்டிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் போதுமான அனுபவத்துடன் தொழில்நுட்ப ஆதரவை பெற்றிருக்க வேண்டும்.

வங்கி அல்லது NCDC போன்ற நிதி நிறுவனங்களால் திட்டத்திற்கான அனுமதிக் கடனைப் பெற்று வரையறுக்கப்பட்ட வங்கியிடமிருந்து உத்தரவாதத்தையும், அந்தக் கணக்கை வைத்திருக்கும் வங்கியால் செல்லுபடியாக்கத்திற்கான மதிப்பீட்டையும் அளிக்க வேண்டும்.

திட்டம் நிறுவப்படும் இடத்தில் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் இருக்க வேண்டும். KYC-க்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nlm.udyamimitra.in/ போர்டலில் விண்ண ப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொழில் முனைவோர் திட்டத்திற்கான திட்ட ஒப்புதல்

பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை வரையறுக்கப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கும்.

வங்கிகளில் பரிசீலிக்கப்பட்டபின்ன மாநில அளவிலான செயற்குழுவின் (SLEC) மூலம் மத்திய அரசுக்கு (DADH) பரிந்துரை செய்யப்படும்.

மத்திய அரசு (DADH) அங்கீகரிக்கப்ப்ட திட்டங்களுக்கான மானியத் தொகையை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) மூலம் பயனாளிகளுக்கு விடுவிக்கும்.

மானியம்

தகுதியான நபர்கள் / நிறுவனங்களுக்கு 50% மூலதன மானியம், மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும். கடன் வழங்கும் வங்கி கடன் தொகையை விடுவித்ததை உறுதி செய்த பின்பே முதல் தவணை மானியத் தொகை பயனாளிக்கு வழங்கப்படும். பணி மூலதனம், தனிப்பட்ட வாகனம், நிலம் வாங்குதல், வாடகைக்கான செலவு மற்றும் நிலத்தின் குத்தகைக்கு மானியம் வழங்கப்படாது. திட்டத்தின் செயல்பாட்டினை திட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை தொடர்ந்து கண்காணிக்கும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

அடையாளச் சான்று (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு / ஓட்டுநர் உரிமம்) முகவரிச் சான்று (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை /ஓட்டுநர் உரிமம் / வங்கி கணக்கு புத்தகம்) திட்டத்திற்கு நிலம் வைத்திருப்பதற்கான சான்று (உரிமம் /குத்தகை), கல்விச் சான்றிதழ் மற்றும் பயிற்சிக் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தியதற்கான சான்று, கடந்த 6 மாதங்களுக்கான வங்கி அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை (மொத்த செலவு, தொடர் செலவு மற்றும் நிகர வருமானம் உட்பட) திட்டம் செயல்படுத்தும் தளத்தின் புகைப்படம், கால்நடை பண்ணை தொடர்பான முன் அனுபவம், திட்டம் செயல்படுத்தும் தளத்தின் புவியியல் குறியீடு.

Updated On: 7 Oct 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு