/* */

அக்மார்க் தரத்துடன் இனிப்பு வகைகள் விற்பனை: ஆவின் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு அக்மார்க் தரத்துடன் இனிப்பு வகைகள் விற்பனை செய்வதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அக்மார்க் தரத்துடன் இனிப்பு வகைகள் விற்பனை: ஆவின் அறிவிப்பு
X

ஆவின் இனிப்பு வகைகள்.

அக்மார்க் தரம் பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் இனிப்புகள் தயாரிக்கப்படுகிறது என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றம் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

ஆவின் நிறுவனம், பால் உப பொருட்களான பால்கோவா, மைசூர்பாக்கு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, ஐஸ்கிரீம். பன்னீர், தயிர், வெண்ணெய், நெய் போன்ற 235 வகையான பால் உப பொருட்களை மாநிலம் முழுவதுமுள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, நெய் அல்வா. கருப்பட்டி அல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காது கத்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் ககாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும் டால்டாவை பயன்படுத்தி ஆவின் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதாக ஒரு நாளிதழில் 17.10.2022 அன்று வெளியாகியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான உள்நோக்கமுடைய அவதூறுகளை ஆவின் நிர்வாகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.

மேலும் ஆவினால் அமர்த்தப்படும் தனியார் பாலகங்களுக்கு அவர்கள் அளிக்கும் தேவைபட்டியலுக்கேற்ப தீபாவளி சிறப்பு இனிப்புகள் அவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித கட்டாயமோ, நெருக்கடியோ அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆவின் சிறப்பு இனிப்புகளை சுமார் 45 இலட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் வாங்கி இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட கேட்டுக்கொள்கிறோம்.

ஆவின் இனிப்பு வகைகளின் தங்களின் மொத்த தேவைகளுக்கு சென்னை: 73580 18391,73580 18392, 73580 18393, 73580 18395 இதர மாவட்டங்கள்: 73580 18396, வாட்ஸ் ஆப் 73580 18390 என்ற தொலைபேசி எண்களிலும், aavinspecialorders@gmail.com என்ற இமெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Oct 2022 10:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்