/* */

அரிசி விலை 'கிடுகிடு' உயர்வு; அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் அரிசி விலை, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

HIGHLIGHTS

அரிசி விலை கிடுகிடு உயர்வு; அதிர்ச்சியில் பொதுமக்கள்
X

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை.

இந்திய உணவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் அரிசி உணவு முக்கிய இடம் பிடிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் இந்த அரிசியின் தரம் சிறந்ததாக இல்லாததால் பலரும் சாப்பிடத் தயங்குகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருவது, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய நாள் முதலாக ஏராளமானவர்களுடைய வாழ்வியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக சிறந்த நிலையில் இருந்த பலரும் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்வை சந்தித்துள்ளன. அத்தியாவசியப்பொருட்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது அரிசியாகும். ஒவ்வொரு ஏழை நடுத்தரக் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டிலும் அரிசிக்கென்று ஒரு தொகை ஒதுக்கப்பட்டிருக்கும். கடந்த ஜூன் முதல் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோ அரிசிக்கு ரூ.10 வரை விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலையில் தரமான சன்ன ரக அரிசி வாங்க வேண்டுமானால் ஒரு கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் கொடுக்க வேண்டியதுள்ளது. இது ஏழை நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரிசி விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நியாய விலைக்கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஏற்றுமதி மற்றும் நெல் பற்றாக்குறையாகும். தமிழக அரிசி உற்பத்தி பெருமளவில் கர்நாடகாவையே நம்பியுள்ளது. அங்கிருந்து கொண்டு வரப்படும் நெல் இங்குள்ள அரிசி ஆலைகளில் அரவை செய்யப்பட்டு அரிசி உற்பத்தி நடைபெறுகிறது. கர்நாடகாவில் நெல் சாகுபடி குறைந்தாலோ மகசூல் இழப்பு ஏற்பட்டாலோ அதன் தாக்கம் தமிழகத்தில் பலமாக எதிரொலிக்கும். கடந்த சில ஆண்டுகளாக அரிசி விலையில் பெரிய உயர்வு எதுவும் இல்லை. இதனால் அரிசி ஆலையினர் பெரிய அளவில் நெல் இருப்பு வைக்கவில்லை.

இந்நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசு, அடுத்தகட்டமாக அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது. இதனால் தேவை அதிகரித்து விலை உயர்வு தொடங்கியது. இதனையடுத்து மத்திய அரசு, உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால் கடந்த பருவத்தில் நெல் உற்பத்தியும் குறைந்த அளவே இருந்ததால் இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.

தற்போதைய பருவத்தில் நெல் உற்பத்தியைப் பொறுத்தே அரிசி விலையில் மாற்றங்கள் ஏற்படும். அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை அரிசி விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளே உள்ளது என, அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் நெல் தட்டுப்பாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரிப்பால் ஒரே மாதத்தில் அரிசி விலை 26 கிலோ மூட்டைக்கு 150 முதல் 300 வரை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குறைவாக நெல் சாகுபடி செய்யப்பட்டதாலும் நெல் கொள்முதல் விலை உயர்வாலும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டதாலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் உள்ள அனைத்து வகையான அரிசியின் விலையானது 26 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு அரிசியின் வகை மற்றும் அதன் தரத்திற்கு ஏற்ப விலையானது கடந்த ஒரு மாதத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

26 கிலோ எடை கொண்ட 1 மூட்டை அரிசியின் பழைய மற்றும் புதிய விலை ( கடந்த வாரம்) நிலவரம்:

900 ரூபாய்க்கு விற்ற பொன்னி அரிசி, 300 உயர்ந்து 1200 க்கும், 980 ரூபாய்க்கு விற்ற புல்லட் அரிசி, 200 உயர்ந்து 1200 க்கும், 1050 ரூபாய்க்கு விற்ற பொன்னி பச்சை அரிசி, 200 உயர்ந்து 1250க்கும், 690 ரூபாய்க்கு விற்ற இட்லி அரிசி 160 உயர்ந்து 850 க்கும், 2200 ரூபாய்க்கு விற்ற பாசுமது அரிசி, 300 உயர்ந்து 2500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அதே சமயத்தில் வெளிநாடுகளுக்கு தமிழக அரிசி வகைகள் ஏற்றுமதியானது அதிகரித்து வருவதாகவும். உடனடியாக மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். இதே நிலை நீடித்தால் தமிழகம் மற்றும் சென்னையில் அரிசியின் விலை தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாட உணவிற்கு 1 கிலோ முதல் 5 கிலோ வரை அரிசி அன்றாடம் வாங்கி சமைக்கும் ஏழை எளிய சாமானிய மக்கள் பெரியளவில் மிககடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனஅரிசி மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரிசி பயன்பாடு என்பது ஒவ்வொரு வீடுகளிலும் தவிர்க்க முடியாதது; மனிதர்களின் உணவு தேவையில் மிக முதன்மையானது. எனவே, அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதில், தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

Updated On: 23 Sep 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது