/* */

மயிலாடுதுறையில் ஆளுனரை வரவேற்க நாங்க ரெடி- தமிழக பா.ஜ.க.அறிவிப்பு

மயிலாடுதுறையில் ஆளுனரை வரவேற்க நாங்க ரெடி என தமிழக பா.ஜ.க. துணை தலைவர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் ஆளுனரை வரவேற்க நாங்க ரெடி- தமிழக பா.ஜ.க.அறிவிப்பு
X

மயிலாடுதுறையில் பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் பேட்டி அளித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையை நாளை மறுநாள் துவக்கி வைக்க உள்ளார். அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது:-

இந்து மதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநரின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிக்கணக்hனோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம்.

தருமபுரம் ஆதீனத்திற்கு பல ஆளுநர்கள் வந்து சென்றபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது நீட் தேர்வுக்கான மசோதாவை கிடப்பில் போட்டதற்கும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வால் ஏழை, எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் பா.ஜ.விற்கு மாற்று கருத்து கிடையாது. தமிழக மாணவர்களை இந்தி படிக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறு கட்டாயப்படுத்;தினால் தமிழக பா.ஜ.க.வே அதனை எதிர்த்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, பா.ஜ.க மாவட்ட தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், நகர தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 18 April 2022 4:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!