/* */

நாளை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்:144 தடை உத்தரவு பிறப்பிப்பு

Vaitheeswaran Kovil Kumbabishekam-பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில், பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவை பிறப்பித்து, மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாளை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்:144 தடை உத்தரவு பிறப்பிப்பு
X

Vaitheeswaran Kovil Kumbabishekam-மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில், செவ்வாய்க்கு உரிய ஸ்தலமான, பிரசித்தி பெற்ற வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் காரணமாகவும், நீதிமன்ற உத்தரவுபடியும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனால், கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, கும்பாபிஷேக விழாவை காண பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நாளை 29 தேதி அதிகாலை 4 மணி முதல், 10 மணி வரை வைத்தீஸ்வரன் கோயிலில் 144 தடை உத்தரவை பிறப்பித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சீர்காழியில் இருந்து வைத்தீஸ்வரன்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டு, பூம்புகார் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள், இன்று 28 ம் தேதி இரவு முதல், நாளை 29 ம் தேதி இரவு வரை மூடவும் உத்தரவு போடப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 5:17 AM GMT

Related News