/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடுவது நிறுத்தம்

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்
X

மயிலாடுதுறை தடுப்பூசி மையம்

கொரோனா இரண்டாம் அலையின்போது அதிக அளவு நோயாளிகள் இறந்ததை அடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து மருத்துவர்களும் அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமடைந்து தடுப்பூசி போடும் மையங்களில் 4 மணி நேரத்திற்கு முன்பே வரிசையில் காத்திருந்து ஊசி செலுத்திச்சென்றனர்.

திடீரென்று தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டு தினந்தோறும் மையங்களில் தகராறு ஏற்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,30,584 நபர்களுக்கு நேற்றுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 15 மையங்களுக்கு மேல் தடுப்பூசி போட்டு வந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையால் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

சீர்காழி அரசு மருத்துவமனையில் 100நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாகப் தடுப்பூசி போடுவதற்கு அறிவிப்பு செல்போன்மூலம் தெரிவிக்கப்பட்டும் பொதுமக்கள் மையத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

Updated On: 4 July 2021 6:45 AM GMT

Related News