/* */

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

200 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

200 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

200 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி அம்பிகையை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

திருமணமாகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளை பூஜித்து வேண்டிக் கொண்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மாசி மக பெருவிழா 200 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறுகிறது. இவ்விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் மற்றும் சுவாமி, அம்பாள் வீதிஉலா காட்சி நடைபெற்ற நிலையில் 9-ஆம் நாள் திருவிழாவான இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் திருநடனம் புரிந்தவாறு வந்து தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்தத நிலையை அடைந்தது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, தக்கார் இளையராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர் இவ்விழாவினை தொடர்ந்து நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Updated On: 16 Feb 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது