/* */

மயிலாடுதுறை அருகே ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா:  நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
X

மயிலாடுதுறை மாவட்டம் குறிச்சி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் 24 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 8ஆம் தேதி பூச்சசொரிதலுடன் துவங்கியது. விழாவின் 11ம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழா இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, கொள்ளிட ஆற்றங்க்கரையிலிருந்து பம்பைமேளம் முழங்க கரக ஊர்வலம் துவங்கியது. சக்தி கரகம், பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி, 16 அடி நீள அலகு வாயில் குத்தியும், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்து தீமிதி திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Updated On: 20 May 2022 2:39 AM GMT

Related News