/* */

மீனவக்குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரம்: சுமூகத் தீர்வு

யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது சட்ட ரீதியான குற்றம், , கிராம மக்கள் சேர்ந்து வாழ வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

மீனவக்குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரம்:  சுமூகத் தீர்வு
X

 சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் முன்னிலையில் 6 குடும்பத்தினர் மற்றும் கிராம தலைவர்கள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது

சீர்காழி அருகே 6 மீனவக் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் கிராம தலைவர், அதிகாரிகளிடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பத்தினரை முன்விரோதம் காரணமாக கிராம தலைவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என தடை போட்டுள்ளதாக பாதித்த குடும்பத்தினர், சீர்காழி வட்டாட்சியர் சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர்.அதன்பேரில், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் முன்னிலையில் 6 குடும்பத்தினர் மற்றும் கிராம தலைவர்கள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது . இதில் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது சட்ட ரீதியான குற்றம். மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க தடை விதிக்க கூடாது எனவும், கிராமத்தில் சென்று சுமூகமாக சேர்ந்து வாழ வேண்டுமெனவும் சுமூக தீர்வு காணப்பட்டது.

மேலும், முன்னதாக கீழமூவர்கரை கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் அந்த 6 குடும்பத்தினரையும் ஊருக்குள் விடமாட்டோம், அவர்களால் தங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்

Updated On: 1 Sep 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...