/* */

மயிலாடுதுறை கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மன்னன்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மாயூரம் டெல்டா ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை வட்டார மோட்டார் வாகன அலுவலர் நாகராஜன் தலைமை வகித்து விபத்தில்லாமல் வாகனங்களை எவ்வாறு கவனமாக இயக்குவது என்பது குறித்து மாணவர்களிடம் பேசினார். மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை.I ராம்குமார் வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் ஏ.வி.சி. கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன், ரோட்டரி கிளப் ஆஃப் மாயூரம் டெல்டா தலைவர் பால் அண்டனி விஜய், பேராசிரியர்கள் மகேந்திரன், பெரியசாமி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Dec 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...