/* */

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு குறைபாடுகளை களைய வலியுறுத்தி விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்
X

விவசாயிகளிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மாவட்ட துணை மேலாளர் பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் 

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடப்பு சம்பா பருவத்துக்கான நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறையை மத்திய அரசு அறிவித்தது. இம்முறையை பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. ஆன்லைன் பதிவு முறையில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி மயிலாடுதுறை மாப்படுகையில் விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, நிகழ்விடத்தில் கூடிய விவசாயிகளிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மாவட்ட துணை மேலாளர் பன்னீர்செல்வம், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், ஆன்லைன் பதிவில் ஒதுக்கப்பட்ட தேதியில், நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றாலும், நெல் மூட்டைகளுக்கு மறுபதிவு செய்யாமல், முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 29 Jan 2022 10:30 AM GMT

Related News