/* */

வெளிநாட்டில் இறந்த கணவர்...சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் மனைவி...

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

வெளிநாட்டில் இறந்த கணவர்...சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் மனைவி...
X

வெளிநாட்டில் இறந்த கணேஷ்.

மயிலாடுதுறை 1-வது புதுத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு 24-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் 29-ம் தேதி உயிரிழந்ததாக கம்பெனி நிர்வாகத்தினர் மயிலாடுதுறையில் உள்ள கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றும் உயிரிழந்ததாகக் கூறப்படும் கணேஷின் மனைவி கல்பனா மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸிடம் இன்று கோரிக்கை மனு அளித்தார். உடனடியாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Updated On: 1 May 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்