/* */

தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிப் பகுதிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

தேர்தலையொட்டி  காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!
X

அச்சமின்றி வாக்களிக்க மயிலாடுதுறையில் காவல்துறை நடத்திய கொடி அணிவகுப்பு ஊர்வலம்.அணிவகுப்பில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்.

மயிலாடுதுறை:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி பகுதிகளில் காவல்துறையினரால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகின்ற 19 ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்கவும்,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பெரம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையில்,குத்தாலம் காவல் ஆய்வாளர்,காவல் ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த அணிவகுப்பு வழுவூர் மெயின் ரோட்டில் துவங்கி பண்டாரவடை,தத்தங்குடி வழியாக மங்கைநல்லூர் கடைத்தெருவில் முடிவடைந்தது.இதில் 74 காவல்துறையினர் பங்கேற்றனர்.

2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின்படி, தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 4 ம் கட்டத் தேர்தல் மே 7ம் தேதியும், 5 ம் இடத்துக்கு மே 20ம் தேதியும், 6 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மே 25ம் தேதியும், 7 வது கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறும், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Updated On: 5 April 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  4. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  5. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  6. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  7. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  8. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  9. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  10. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?