/* */

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 6வது நாளாக போராட்டம்

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள், 27 மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி, 6வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.

HIGHLIGHTS

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 6வது நாளாக போராட்டம்
X

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள், நிலுவை சம்பளதொகையை வழங்ககோரி, 6வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 5 அரவை பருவங்களாக இயக்கப்படாமல் உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்தவர்களை, 2017-ஆம் ஆண்டு, பிற கூட்டுறவு ஆலைகளுக்கு செல்ல ஆலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பிற ஆலைகளுக்கு சென்ற நிலையில், மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் இந்த ஆலையில் தற்போதும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கி, தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இந்த ஆலையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தவித பணப் பயனும், ஓய்வு ஊதியமும் வழங்கப்படவில்லை.

சம்பளம் வழக்காத்தை கண்டித்து, ஆலைத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 6வது நாளாக போராட்டம் தொடர்ந்து, இரவு பகலாக நீடித்து வருகிறது. இருபத்தி ஏழு மாத கால சம்பளம் வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...