/* */

பிள்ளைகளால் விரட்டப்பட்ட 90 வயது மூதாட்டி உணவிற்காக கையேந்தும் அவலம்

மயிலாடுதுறையில் பிள்ளைகளால் விரட்டப்பட்ட 90 வயது மூதாட்டி உணவிற்காக கையேந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பிள்ளைகளால் விரட்டப்பட்ட 90 வயது மூதாட்டி உணவிற்காக கையேந்தும் அவலம்
X

மயிலாடுதுறையில் பிள்ளைகளால் வீட்டை விட்டு விரட்டி விடப்பட்ட மூதாட்டி.

மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி(90) என்பவர் கணவனை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அசரப்அலியுடன் வசித்து வந்துள்ளார். மகன் வெளிநாடு சென்றதும் மருமகள் கடந்த மாதம் வீட்டைவிட்டு விரட்டிவிட்டார். அதே ஊரில் வசித்துவரும் தனது பெரிய மகனிடம் தாவூத் பீவி சென்றார். அவரும் விரட்டிவிடடார். மகள் வீட்டிற்கு சென்றவரை அவரும் ஏற்றுகொள்ளவில்லை.

வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் கூறியதற்கும் மகன்கள் கேட்கவில்லை. குவைத்தில் இருக்கும் அசரப்அலியும் என்வீட்டில் அவர் இருக்கக்கூடாது என்றார். அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டுவந்த நிலையில் மயிலாடுதுறையில் கடந்த மாதம் 4ஆம்தேதி மாவட்ட ஆட்சியரின் மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டு என்னை என் பிள்ளைகள் ஏற்றுகொள்ளவில்லை, என் வீட்டை பிடுங்கி அதில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். ஒருவேளை உணவு கொடுக்க விருப்பம் இல்லாமல் துரத்திவருகின்றனர். எனக்கு உரிய சொத்தை அளித்தாலே இறுதிவரை நிம்மதியாக வாழ்வேன் இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்றார்.

வருவாய்துறையினர் அசரஃப் அலி வீட்டில் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி விட்டிருந்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழை நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றி வாசற்கதவை பூட்டிவிட்டனர், மழையில் நனைந்தபடியே எதிர்வீட்டில் கையேந்தி உண்டு வருகிறார். நான் உயிர்வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மூதாட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 14 Nov 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...