/* */

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் ஆளுநர் நிறுத்திவைப்பு?

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கத்தை ஆளுநர் நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

HIGHLIGHTS

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்   ஆளுநர்  நிறுத்திவைப்பு?
X

செந்தில் பாலாஜி, ஆளுநர் ரவி

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவரை அமலாக்கத்துறையினர், சில வாரங்களுக்கு முன் அதிரடியாக கைது செய்தனர். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 18 மணி நேரத்துக்கு மேல், செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்திய நிலையில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து. அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் காவேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார். மேலும், செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இதுகுறித்து தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மறைமுகமான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இது கடந்த 16ம் தேதி நடந்தது.

ஆளுநர் ஆர்என் ரவியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜியை, அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் உத்தரவு குறித்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை; இதை சட்டரீதியாக சந்திப்போம்,’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று (ஜூன் 30) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்தும் முடித்துக் கொண்டு, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், சட்ட வல்லுநர்கள், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து முதலமைச்சர் .ஸ்டாலின் ஆலோசிக்கிறார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆளுநரின் அதிரடி உத்தரவு குறித்தும் ஆலோசிக்கவுள்ளார்.

கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி. வில்சன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On: 1 July 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  2. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  3. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  4. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  7. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  8. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  9. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  10. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி