/* */

எடப்பாடி பழனிசாமி, டில்லிக்கு திடீர் பயணம்

இன்றிரவு, திடீர் பயணமாக டில்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

எடப்பாடி பழனிசாமி, டில்லிக்கு திடீர் பயணம்
X
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றிரவு டில்லி பயணம்.

அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியது. அதேபோல், அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், அவருக்கு சாதமாகவே சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில், இன்று இரவு 9 மணிக்கு, சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டில்லி செல்கிறார். 3 நாட்கள் அவர் டில்லியில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது. டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான, நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Updated On: 19 Sep 2022 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை