/* */

குழந்தைகள் நலபாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்

Child Welfare Officer -திருப்பூரில் காப்பகத்தில் 3 சிறுவர்கள் பலியான விவகாரத்தில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குழந்தைகள் நலபாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்
X

திருப்பூரில், காப்பக சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ( கோப்பு படம்)

Child Welfare Officer -திருப்பூர் அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டியில் 'விவேகானந்த சேவாலயம்' என்ற ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டது. இங்கு கடந்த 5-ம்தேதி காலை உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளிக்க, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

காப்பகத்தில் உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 11 சிறுவர்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். ஈரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், அவர்கள் சேர்க்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில மாணவர்கள் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக சிகிச்சையில் இருந்த சிறுவர்களை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நலம் விசாரித்து, நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறும்போது, 'குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்ட நிர்வாகி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும், சிறுவர்கள் காப்பகம் மூடப்படும். ஏற்கனவே ஆய்வு செய்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளாததால் அவர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். அதே போல், அடுத்த இரண்டு தினங்களில், விவேகானந்தா சேவாலயம் காப்பகம் மூடப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவை, சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக, சமூக பாதுகாப்புத்துறையின் நன்னடத்தை அலுவலர், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு (பொறுப்பு) அலுவலராக நித்யா, நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்காணிப்பும், ஆய்வும் முக்கியம்

திருப்பூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. முதியோர் காப்பகங்கள், பெண்கள் காப்பகங்களும் செயல்படுகிறது. இதில், நுாற்றுக்கணக்கோர் தங்கியுள்ளனர். அந்தந்த காப்பக நிர்வாகங்களால், அவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். உணவு, உடைகள், தங்குமிடம் என்ற அடிப்படை தேவைகளை செய்து தருவதே, ஆதரவற்றவர்களுக்கு பிரதானமாக உள்ளது. இதற்கு, நன்கொடையாளர்களும், உதவி செய்கின்றனர்.

எப்போதுமே, இதுபோன்ற விபரீதமான சம்பவங்கள் நடந்தே பிறகே, அரசும், அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் 'விழித்துக்கொண்டு' அதுசார்ந்த நடவடிக்கைகளை எடுக்கின்றனர். ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டு தவறிழைத்த துறை சார்ந்த அலுவலர்களை பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. துவக்கத்தில் இருந்தே கவனத்துடன் இருந்திருந்தால், விபரீதமான நிகழ்வுகளை தடுக்க முடியும். உயிர்பலிகளும் ஏற்படாது. ஆனால், அலட்சியமாக செயல்படும் அரசுத்துறை அலுவலர்கள், தங்களது மெத்தனப்போக்கால் இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு ஒரு விதத்தில் காரணமாகி விடுகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Oct 2022 4:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...