/* */

பள்ளிகள் திறப்பு எப்போது? மாணவர்களுக்கு நற்செய்தி! அரசு அதிரடி அறிவிப்பு!

School Reopen Date Tamil Nadu-பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முடிவு.

HIGHLIGHTS

School Reopen Date Tamil Nadu
X

School Reopen Date Tamil Nadu

School Reopen Date Tamil Nadu-பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முடிவு.

கொளுத்தும் வெயிலில் பள்ளி மாணவர்கள் அவதிப்படுவார்கள் என்பதால் பள்ளிகளின் திறப்பு மேலும் 5 நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வகையிலேயே இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், அதிகாரிகள் முதலமைச்சர் மு க ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையின் முடிவில் ஜூன் 7ம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் அனைத்தும் மறுதேதியில் திறக்கப்படும் என்றும், இதில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெயிலின் தாக்கம் இன்னும் ஒரு வாரம் இதே நிலையிலேயே இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 18 மாவட்டங்களில் தொடர்ந்து 2,3 வாரங்களாக 100 டிகிரியையும் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாமா என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு பின்னர் வெயில் காரணமாக ஜூன் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 9:44 AM GMT

Related News