/* */

கன்னியாகுமரிக்கு 'ரெட் அலர்ட்'; 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' முழுவிபரம்

கன்னியாகுமரிக்கு 'ரெட் அலர்ட்' உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் மழை விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  முழுவிபரம்
X

பைல் படம்.



அந்தமான் கடலின் மத்திய பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நவம்பர் 15ம் தேதிக்குள் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதியில் நகரக்கூடும். நவ. 17ம் தேதிக்குள் மேற்கு-மத்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, 18ம் தேதி தெற்கு ஆந்திர கடற்கரையை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட உள் தமிழக பகுதிகளில் (3.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

14.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

15.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

16.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர்.) ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

17.11.2021 & 12.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31) மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

Updated On: 15 Nov 2021 2:42 AM GMT

Related News