/* */

சேலத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம்: தமிழக முதல்வர் திறப்பு

சேலம், அய்யந்திருமாளிகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சேலத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம்: தமிழக முதல்வர் திறப்பு
X

சேலம், அய்யந்திருமாளிகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

சேலம், அய்யந்திருமாளிகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையக் கட்டடத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டும், வாசிப்பை நேசிக்கச் செய்திடவும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகை அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.

இம்மையத்தில் வாசிப்பு அறை, ஸ்மார்ட் வகுப்பறை, இணையதள வசதிகளுடன் கூடிய கணினி மையம், நூலகர் அறை, கண்காணிப்பு கேமிரா கட்டுப்பாட்டு அறை, மேலாளர் அலுவலகம் மற்றும் இருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்புக் கேமிராக்கள், எல்.சி.டி தொலைக்காட்சி, புரொஜெக்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுசார் மையம் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்பெறுவார்கள்.

சேலம், அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 71 அறிவுசார் மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். இதன்மூலம் உயர்கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, பொது நூலகத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு முழு நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நூலகத்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற அறிவுசார் மையங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதுபோன்ற அறிவுசார் மைய வசதிகள் ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்துப் பகுதி மக்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமாராணி ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 5 Jan 2024 3:49 PM GMT

Related News