/* */

அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில், அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம்..!
X

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 2 ஆயிரத்து 127 அங்கன்வாடி மையங்களில், அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தில் செயல்படும் 2 ஆயிரத்து 127 குழந்தைகள் மையங்களில் அடிப்படை வசதிகள், புதிதாக கட்ட வேண்டிய மையங்கள், பழுது பாா்க்க வேண்டிய மையங்கள், குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகள் செய்வது, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக தனியாக ஒரு கழிப்பறை ஏற்படுத்துவது, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா்

கூட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலா் மீனாம்பிகை மற்றும் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் குறித்த பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட சமூக நல அலுவலா் மீனாம்பிகை தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலா் கோமதி வரவேற்றாா். திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி அனுபவப் பகிா்வு என்ற தலைப்பில் பேசினாா். தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் தாமோதரன், திருவள்ளூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் விஜயலட்சுமி, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி எலிசபெத்ராணி, மாவட்ட தொண்டு நிறுவன இயக்குநா் ஸ்ரீதா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்புச் சட்டம் 2007-ஐ விளக்கிப் பேசினா்.இதில், மூத்தோா் இல்ல நிா்வாகிகள், மூத்தோா் பாதுகாப்புச் சட்ட குழு உறுப்பினா்கள், வட்டார விரிவாக்க அலுவலா்கள், மகளிா் அதிகார மைய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 8 Feb 2024 1:09 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...