/* */

விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி - இறையன்பு

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு காஞ்சிபுரத்தில் முன்னாள் , இந்நாள் நிலவொளி பள்ளி மாணவர்களுடன் உரையாற்றினார்.

HIGHLIGHTS

விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி - இறையன்பு
X

கடந்த 25 வருடங்களாக காஞ்சிபுரம் நிலவொளி பள்ளியில் பயின்ற மாணவர்களுடன் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உரையாடல் நிகழ்த்திய போது

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையே நிலவொளிப் பள்ளிக்கு சாட்சியாக பெருமையாக உள்ளது என முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு காஞ்சிபுரத்தில் அப்பள்ளியில் பயின்ற நபர்களுடன் சந்திக்கும் போது நெகழ்ச்சியாகவுள்ளதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கடந்த 1998 ஆண்டு திரு.இறையன்பு பணிபுரிந்தார். அப்போது பட்டு நெசவு தொழிலும், அப்பளத் தொழிலும் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்று இருந்த நிலையில் , அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபட்டு குடும்பத்தில் உள்ள பள்ளி பயிலும் மாணவர்கள் கல்வியை இடைநிற்றல் மேற்கொண்டதை அறிந்து , அப்போது குழந்தை தொழிலாளர்கள் இருந்த 181 குழந்தைகளை மீட்டு நிலவொளி பள்ளி என தொடங்கி கல்வி கற்க ஆரம்பித்து வைத்தார்.

அவ்வகையில் இந்த பள்ளி மாலை 7 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 வரை நடத்தப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளில் இதுவரை 20 ஆயிரத்து 731 பேர் இந்த பள்ளிகள் மூலம் கல்வி கற்று சிறப்புடைந்துள்ளனர்.

இந்தப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அங்கு அளித்த ஊக்கத்தின் பேரில் இதுவரை 85 மாணவர்கள் அரசு துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை இன்று முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் சந்தித்து அவர்களுடன் நெகிழ்ச்சி உரையாடல் நிகழ்த்தினார்.

இந்தப் பள்ளியில் பயின்றவர்கள் தங்கள் கடந்த கால கல்வி நிலை, அதனை தொடர நிலவொளி பள்ளி உதவியது உள்ளிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை தெரிவித்து அனைவரையும் மகிழ செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய இறையன்பு, இந்தப் பள்ளிகள் மூலம் நீங்கள் எல்லாரும் படித்து முன்னேறியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு நாங்கள் மட்டும் காரணம் அல்ல படித்த நீங்கள் தான் முக்கிய காரணம் எனவும் , ஆடு தாண்டும் காவிரி ஆக இருந்த நிலவொளி பள்ளி இப்போது அகன்ற காவிரி ஆக வெளிப்பட்டு கல்வி இடைநீற்றல் கல்வியை தவிர்க்க உதவுகிறது.

கல்விக்கு என்றுமே முடிவு இல்லை என்பதும், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையே தற்போது இந்த நிலவொளி பள்ளிக்கு சாட்சியாக உங்கள் முன் நிற்கிறது.

விவசாய பணி செய்யும் நபர்கள் கூட தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து கல்வி கற்பதன் மூலம் எளிதில் இலக்கை அடையலாம்.

உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாராவது இடைநிற்றல் ஏற்பட்டால், அவர்களை சந்தித்து தன்னம்பிக்கை ஊட்டி கல்வி கற்க செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் நில ஒலிப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் அண்ணலரசு, ஹேண்ட் அன் ஹேண்ட் நிர்வாகி மோகனவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அனைவரும் தங்களது மன மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியும் தெரிவித்தது அனைவருக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும் என்பதை நோக்கமாக உள்ளது.

Updated On: 28 April 2024 2:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!