/* */

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி , திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.

HIGHLIGHTS

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி
X

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அரசின் சார்பாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த 1,650 நபர்களில் கொரோனாவால் உயிரிழந்த 923 குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் இணைய வழி வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து இரு முறை பதிவு மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாத 124 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் மீதமிருக்கும் 153 மனுக்கள் இறப்பு குறித்த ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலனையில் உள்ளது. அதன்பின் இந்த நிதி உதவி பெறாமல் எவரேனும் விடுபட்டு இருந்தால் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரம், வாரிசு சான்று, இறப்புச் சான்று ஆகியவற்றை கொண்டு https://www.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் "வாட்ஸ் நியூ" பகுதியில் Ex-Gratia for COVID-19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உதவி தொகை பெற்றுக் கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து வங்கி கணக்கு புத்தகம், வாரிசு சான்று, இறப்புச் சான்று மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் நிதியுதவி பெறுவது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர பேரிடர் கட்டுப்பாட்டு அறையை கட்டணம் இல்லாமல் தொலைபேசி எண் 04175-232377 அல்லது 04175-1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...