/* */

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்திய மனித சங்கிலி போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது

HIGHLIGHTS

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்திய  மனித சங்கிலி போராட்டம்
X

திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள்

பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டம் குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில்,

அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.இதையொட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகும், அதே நிலையே தொடர்கிறது. புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி, அவற்றை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தமிழகத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதேநேரம், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மாதிரிப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், மறைமுகமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 21 மாத ஊதியம் மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்க வேண்டும்.சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆரணி

தமிழ்நாடு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி போராட்டம் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பாக ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, பிரபு, சொக்கலிங்கம், சுந்தர் ஆகியோர் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவருமான ரமேஷ்பாபு, மாநில துணைப் பொதுச் செயலாளரும், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி புருஷோத்தமன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் முத்துவேலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆசிரியர்கள் கோரிக்கைகளை அடங்கிய அட்டைகளை கழுத்தில் அணிந்து கொண்டு கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பி கலந்து கொண்டனர். கோட்டை மைதானம் முழுவதும் நான்கு பக்கமும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

செங்கம்

செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போளூர்

போளூர் பஸ் நிலையம் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் ஆசிரியர் கூட்டணி, அனைத்து ஆசிரியர் சங்கம், அரசு காப்பாளர் நலச் சங்கம், அரசு ஊழியர் சங்கம் என அனைத்து சங்கத்தினர் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

செய்யாறு

செய்யாறு தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Updated On: 25 March 2023 1:54 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...