/* */

நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் கோர்ட் ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி
X

ஜப்தி செய்யப்பட அரசு விரைவு பேருந்து.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அர்ஜுனன். கடந்த 2004-ம் ஆண்டு சந்தவாசல் பகுதியில் அரசு விரைவு பஸ் மோதியதில் அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி வள்ளியம்மாள் மற்றும் குடும்பத்தினர் திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, லாரி டிரைவர் அர்ஜுனன் குடும்பத்தினருக்கு 6 லட்சத்து 68 ஆயிரத்து 148 ரூபாய் நஷ்டஈடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து அர்ஜுனன் குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அர்ஜுனன் குடும்பத்திற்கு 6 லட்சத்து 72 ஆயிரத்து 106 ரூபாய் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

ஆனாலும் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. தொடர்ந்து அர்ஜுனன் குடும்பத்தினர் மீண்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி திருமகள், அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சியில் இருந்து கண்ணமங்கலம் வழியாக வேலூர் சென்ற விரைவு பஸ்சை ஆரணி கோர்ட் அமீனா மற்றும் பணியாளர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். முன்னதாக அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 24 Sep 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  4. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  7. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  8. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  9. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு