/* */

நேரடிக் நெல் கொள்முதல்: ஆன்லைன் மூலம் பதிவு செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தின் முன்பு நெல் கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நேரடிக் நெல் கொள்முதல்: ஆன்லைன் மூலம் பதிவு செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர்.

ஆனால் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிகப்படியான நெல் மூட்டைகள் வருவதால் விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் ஆன்லைன் பதிவில் விவசாயிகள் பதிவு செய்யும் முன்னரே அனைத்து பதிவுகளும் பூர்த்தியாகி விட்டது என வருவதால் விவசாயிகள் ஆன்லைன் பதிவில் பதிவு செய்ய முடியாத நிலையே திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவி வருகிறது.

விவசாயிகளால் ஆன்லைன் பதிவில் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கு மாறாக வியாபாரிகள் விவசாயிகள் என்ற பெயரில் ஆன்லைன் பதிவில் பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் காலை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்திற்கு நெல்கொள்முதல் செய்வதற்காக பதிவு செய்ய பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தனர். அலுவலகத்திற்குள் விவசாயிகள் வரமுடியாத படி கேட்டை பூட்டி வெளியே நிற்க வைத்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திடீரென காலை சுமார் 9.30 மணியளவில் அலுவலகம் முன்பு போளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து வந்தனர்.

இருப்பினும் அலுவலர்கள் விவசாயிகளை மீண்டும் அலுவலகத்தின் வெளியிலேயே காத்திருக்க வைத்தனர். இதனால் மீண்டும் ஆவேசம் அடைந்த விவசாயிகள் 2-வது முறையாக சுமார் 10.30 மணியளவில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக நின்றது. சாலையில் சென்ற மக்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வந்து பூட்டியிருந்த அலுவலக கேட்டை ஆவேசமாக தள்ளி திறந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை வாங்க வேண்டும் என்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த மாதம் 30-ம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை பெறுவதற்கான ஆன்லைன் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் விவசாயிகளை தவிர்த்து வியாபாரிகள் யாரேனும் உள்ளார்களா? என கள ஆய்வு செய்த பின்னர் நெல்லை கொள்முதல் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். கள ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றனர்.

Updated On: 1 Jun 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...