/* */

மாறுவேட போட்டியில் அசத்திய குழந்தைகள்

Maruveda Potti in Tamil-திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் மாறுவேட போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

Maruveda Potti in Tamil
X

Maruveda Potti in Tamil

Maruveda Potti in Tamil-திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஃபேன்ஸி டிரஸ் போட்டி நடைபெற்றது. பள்ளியின் துணை தாளாளர் விஜிதா குமரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் பதிவாளர் முனைவர் சத்தியசீலன் தலைமை வகித்து சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

பள்ளியின் முதல்வர் கே எஸ் சிவபிரகாஷ் , அனைவரையும் வரவேற்று பேசினார். திருவண்ணாமலை நாட்டியாலயா அகாடமியின் இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளுக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தினர்.

போட்டியின் நிறைவாக சிறப்பு விருந்தினர் கலைச்செல்வி, சிறப்பாக மாறுவேட போட்டியில் அசத்திய மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியா, சிறப்பு விருந்தினர் கலைச்செல்வி, மாணவ மாணவர்களிடையே பேசும்போது மாணவர்களின் அசத்தலான கற்பனை வளமும் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் தோற்றங்களும் மனதை மகிழ்ச்சி கொள்ள செய்தது. மாணவ-மாணவிகளின் கருத்துக்கள் பெரியவர்களாகிய நாமும் கடைபிடித்து சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் பரிசு பெற்ற மாணவர்கள் அல்லாது கலந்து கொண்ட அனைவரின் கருத்துக்களும் அவர்கள் அணிந்து வந்த ஆடை அலங்காரமும் மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. என்று பேசினார். நிகழ்ச்சியின் நிறைவாக தலைமை ஆசிரியர் சூரிய பிரபா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 5:05 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!