/* */

திருவண்ணாமலைக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் எ வ.வேலு

திருவண்ணாமலை குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ 5,700 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் வேலு கூறினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு காவிரி கூட்டு குடிநீர்  திட்டம்: அமைச்சர்  எ வ.வேலு
X

 பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு  

திருவண்ணாமலை நகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க ரூபாய் 5,700 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்ட இருக்கிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பேசுகையில், திருவண்ணாமலை நகரில் தடையின்றி குடிநீர் கிடைக்க காரணம் திமுக அரசுதான், நான் அமைச்சராக இருந்தபோது மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்பு வந்த ஆட்சியாளர்கள் அதனை செய்து முடிக்காத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விரைவில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும் 10 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் திருவண்ணாமலையில் அமைய உள்ளது, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மாட வீதி முழுவதும் கான்க்ரீட் சாலைகள் அமைத்து தரப்படும். என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் எம்பி அண்ணாதுரை, மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், கார்த்திக் வேல்மாறன் , டி.வி.எம்.நேரு, கமலேஷ் குமார், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Feb 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை