/* */

செய்யாறு தாலுகாவில் தாா்ச்சாலை அமைக்க பூமி பூஜை

செய்யாறு தாலுகாவில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய தார் சாலை போடுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யாறு தாலுகாவில் தாா்ச்சாலை அமைக்க பூமி பூஜை
X

தார் சாலை அமைக்க நடந்த பூமி பூஜை நிகழ்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் பெருமாந்தாங்கல் - வடமணப்பாக்கம் இடையே ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2.7 கி.மீ தொலைவுக்கு தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய தார் சாலை போடும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் நாவல்பாக்கம் பாபு, திலகவதி ராஜ்குமார், திமுக நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், தினகரன், சங்கர், ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்னல் தாக்கியதில் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

செய்யாறு நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. தேவையற்ற மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நகராட்சி வளாகத்தில் பின்புறம் உள்ள கிடங்கில் சேமிக்க வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.30 மணி முதல் செய்யாறில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது இரவு 11.30 மணி அளவில் மின்னல் திடீரென குப்பை கிடங்கில் மின்னல் தாக்கியது.

இதில் தீப்பொறி விழுந்து குப்பைகள் எரிய தொடங்கின. நகராட்சி நிர்வாகத்தினர் செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததினர் அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகரமன்ற தலைவர் மோகனவேல், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் மீண்டும் தீப்பிடித்து கொண்டது. இன்று காலை 8 மணி வரை எரிந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் அனல் காற்றும் வீசியது. மேலும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் கோரி மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள தனியாா் நெல் கொள்முதல் மையத்தில் தாமதமின்றி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு வசதியாக செய்யாறு பகுதியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும், நெல் கொள்முதல் மையங்கள் செயல்படும் பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கூடுதலாக 24 டன் அரைவை செய்ய இலக்கு நிா்ணயித்து விரைவாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக ஆள்கள் நியமிக்க வேண்டும், நெல் மூட்டைகளை உடனடி எடுத்துச் செல்வதற்கு லாரிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1.80 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்தது போல, நிகழாண்டு காரி பருவம் செப்டம்பருக்குள் 1.50 லட்சம் டன்னுக்கு இலக்கு எட்ட முடியும் என தெரிவித்துள்ளனா்.

Updated On: 6 May 2023 10:18 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை