பெரியபாளையம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி கைது

பெரியபாளையம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரியபாளையம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி கைது
X

கைது செய்யப்பட்ட நிலவழகன் என்கிற செந்தில்.குமார்.

ஆரணி பேரூர் தி.மு.க. துணைச் செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பேரூராட்சி உறுப்பினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பருத்தி சூதாட்டம் எனப்படும் காட்டன் சூதாட்டம் மற்றும் மூன்று சீட்டு எனப்படும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவை கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாணிற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.இந்நிலையில், நேற்று மாலை ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆரணி போஸ்ட் ஆபீஸ் அருகே சென்றபோது பணம் வைத்து பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்பொழுது அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.மற்றொருவரை கைது செய்து அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.1,110 மற்றும் துண்டு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.விசாரணையில் அவரது பெயர் நிலவழகன் என்ற செந்தில்குமார்(வயது39) என்பதும் அவர் ஆரணி,எஸ்.பி. கோவில் தெருவில் வசித்து வருவதும் தெரிய வந்தது.மேலும்,தப்பி ஓடியவர் ஆரணியைச் சேர்ந்த நித்யராஜ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில்,கைது செய்யப்பட்ட நிலவழகன் என்ற செந்தில் ஆரணி பேரூர் தி.மு.க .துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பொன்னரசி ஆரணி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் ஆவார். நிலவழகன் என்ற செந்தில் கைது செய்யப்பட்ட செய்தி ஆரணி பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.

இதனால் தி.மு.க.வைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஆரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆரணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆரணி காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.பின்னர், அனைவரையும் கலைந்து செல்ல செய்தனர்.

இதனால் காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.உடனடியாக கைது செய்யப்பட்ட நிலவழகன் என்ற செந்திலை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வெங்கல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.பின்னர்,அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.பின்னர்,அவரது உத்தரவின் பேரில் நிலவழகன் என்ற செந்திலை புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் பலர் தெரிவிக்கையில் ஆரணி பேரூராட்சியில் இந்த காட்டன் சூதாட்டம் அதிக அளவில் நடைபெறுவதாகவும். கூலி தொழிலாளிகளை குறிவைத்து பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை இந்த சூதாட்டத்தில் ஈடுபடுத்துவதாகவும் சமீபத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் பலரும் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி உயிர் இழந்த நிலையில். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே ஏழை மக்களின் உழைப்பை சுரண்டும் இதுபோன்று கும்பல்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்றனர்.

Updated On: 19 March 2023 10:13 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
 3. தமிழ்நாடு
  ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
 4. தமிழ்நாடு
  அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
 5. உடுமலைப்பேட்டை
  அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
 6. லைஃப்ஸ்டைல்
  வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
 7. தாராபுரம்
  தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
 8. திருப்பூர்
  திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
 10. காஞ்சிபுரம்
  வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி