/* */

லஞ்சம் வாங்கிய வழக்கு: அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ரூ 2500.ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கிய வழக்கு: அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்

திருவள்ளூரில் ரூபாய் 2500. லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார். இவர் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சல்பர் எடுத்துக் கொள்வதற்கு உரிமம் பெற வேண்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எஸ். அலுவலகத்தில் சென்று கடந்த 2010ஆம் ஆண்டு மனு கொடுத்திருந்தார். இந்த மனு பரிசீலனை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது .

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் அதே அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் விபீஷணன் என்பவரை ரவிக்குமார் சந்தித்து தன் அளித்த மனுவினை பரிந்துரை செய்து உரிமம் பெற்று தர வேண்டுமெனக் கூறியுள்ளார். அதற்கு உரிமம் பெற்றுத்தர வேண்டும் என்றால் ரூபாய் 2500 லஞ்சம் தந்தால்தான், அந்த மனுவை பரிசீலனை செய்து பரிந்துரை செய்வதாக ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கடந்த 16.12.2010ஆம் தேதி அன்று புகார் அளித்தார். இதையடுத்து ரவிக்குமாரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் கலந்த பணத் தாள்களை கொடுத்து விபீஷணனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி அந்த பணத்தாள்களை விபீஷணன் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வேலரசு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அலுவலர மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி விபீஷணனுக்கு நான்கு வருடம் சிறை தண்டனையும் ரூபாய் 20.000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.



Updated On: 18 March 2023 5:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது