/* */

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அனுமன் சேனா சார்பில் 5 அடி வேல் காணிக்கை

சொக்கநாதர் கோயிலில் 5 அடி வேலுக்கு பூஜை செய்து யாத்திரையாக வந்து முருகனுக்கு காணிக்கையாக செலுத்தினர்

HIGHLIGHTS

மதுரை திருப்பரங்குன்றம்  கோயிலுக்கு அனுமன் சேனா சார்பில்  5 அடி வேல் காணிக்கை
X

 5 அடி வேலுக்கு பூஜை செய்து யாத்திரையாக வந்து  திருப்பரங்குன்றம் முருகனுக்கு காணிக்கையாக செலுத்தினர்

சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் அவதூறாக பேசியவரை சூரசம்ஹாரம் செய்ய வேண்டி அனுமன் சேனா சார்பாக திருப்பரங்குன்றம் கோவிலில் வேல் காணிக்கையாக வழங்கப்பட்டது:

சிதம்பரம் நடராஜரையும் , தில்லை காளியும் அவதூறாக பேசிய வரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே, கடவுளை தண்டிக்க சூரசஹாரம் செய்வதற்காக அனுமன் சேனா சார்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 5 அடி வேல் காணிக்கையாக வழங்கினர். இதற்காக, திருப்பரங்குன்றம் அருகே உள்ள சொக்கநாதர் கோயிலில் இருந்து 5 அடி வேலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் யாத்திரையாக வந்து முருகனுக்கு வேலை காணிக்கையாக செலுத்தினர்.

இதுகுறித்து, அனுமன் சேனா நிர்வாகிகள் கூறுகையில்.. தற்போதைய ,தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது . தற்போது ,சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே ,அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சூரசம்ஹாரம் செய்வதற்காக அனுமன் சேனா சார்பாக வேல் காணிக்கையாக வழங்குகிறோம். தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

Updated On: 18 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...