கடம்பூர் மலைப்பகுதியில் இந்து கடவுளை அவமதித்த இளைஞர்களை கைது செய்ய சாலை மறியல்

கோவிலுக்கு சென்று போதைப்பொருட்கள் உபயோகித்துக் கொண்டு கோவிலில் உள்ள வேல் கம்புகளை எடுத்து சேதம் செய்ததாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடம்பூர் மலைப்பகுதியில் இந்து கடவுளை அவமதித்த இளைஞர்களை கைது செய்ய சாலை மறியல்
X

கடம்பூர்மலைப்பகுதியில் உச்சியில் அமைந்துள்ள கம்பத்ராயன் கிரி திருக்கோயில்,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர்மலைப்பகுதியில் உச்சியில் அமைந்துள்ளது கம்பத்ராயன் கிரி திருக்கோயில், இக்கோவிலில்வருடா வருடம் புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கம்பத்ராயன் கிரி மலையில் உள்ள கோவிலுக்கு சென்று போதைப்பொருட்கள் உபயோகித்துக் கொண்டு கோவிலில் உள்ள வேல் கம்புகளை எடுத்து சேதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, ஆத்திரமடைந்த கடம்பூர் பகுதி பொதுமக்கள் இந்து கோவிலை அவமதிக்கும்படி நடந்து கொண்டவர்களை கைது செய்யக்கோரி நூறுக்கும் மேற்பட்டோர் கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இருப்பினும் அவர்கள் மீது வழக்கு செய்யாமல் மெத்தனம் காட்டிய காவல்துறையை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் காவல்துறையினர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோவிலை அவமரியாதை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து ,அனைவரும் கலைந்து சென்றனர்.இ தனால் கடம்பூர்-சத்தியமங்கலம் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 5 Oct 2021 6:00 PM GMT

Related News

Latest News

 1. வானிலை
  தமிழகம், புதுவையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
 2. தமிழ்நாடு
  இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு
 3. ஈரோடு
  அந்தியூர் அருகே பாலாற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
 4. அரியலூர்
  படைக்கலன் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவு
 5. அரியலூர்
  இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
 7. மதுரை மாநகர்
  மதுரை ரயில்வே வர்த்தக கோட்ட மேலாளர் பதவி ஏற்பு
 8. ராதாபுரம்
  கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
 9. கன்னியாகுமரி
  இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு...
 10. குளச்சல்
  அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து...