/* */

அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

அரூர் பகுதியில் எட்டு வழி சாலை போராட்ட காரர்கள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் என அரசு அறிவிப்பு க்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்

தமிழகத்தில் சென்னை முதல் சேலம் வரை சுமார் பத்தாயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த எட்டு வழி சாலை திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசும், கடந்த கால அதிமுக அரசு குறியாக இருந்தனர்.

ஆனால் ஐந்து மாவட்ட விவசாயிகளும் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி, திட்டத்திற்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து, நிலம் தர மாட்டோம் என அகிம்சை வழியில் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் விவசாயிகளின் மீது அன்றைய அதிமுக அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக தலைமையில் புதிய ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. இந்த ஆட்சி அமைத்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டு வழி சாலையை அமைய விடமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தார். தொடர்ந்து இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எட்டு வழிசாலைக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது பதியப்பட்டு உள்ள அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஒன்றிணைந்து, அரூர் அடுத்த லிங்காபுரத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அதேபோல் எட்டு வழி சாலை அமைக்க துடித்த மத்திய பாஜக அரசும், முன்னாள் அதிமுக அரசும் விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை நடத்தியது. ஆனால் தற்பொழுது பதவியேற்றுள்ள திமுக அரசு விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறப் படும் எனவும், இந்த எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை அமைக்க விடமாட்டோம் என அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவசாயிகள் கடவுளாக வணங்கி மகிழ்வோம் என எட்டு வழிசாலை எதிர்ப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  3. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  6. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  7. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்