/* */

மாநில மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து திரளாகப் பங்கேற்க முடிவு

மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து பெரும் திரளாகப் பங்கேற்பது சிபிஐ எம் செயற்குழுவில் தீர்மானம்

HIGHLIGHTS

மாநில மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து  திரளாகப் பங்கேற்க முடிவு
X

மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து பெரும் திரளாகப் பங்கேற்பது சிபிஐ எம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தர்மபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் அரசியல் விளக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, முத்து,மாதன், கிரைசாமேரி, விசுவநாதன், ஜோதிபாசு, ரவி(எ)முனிரத்தினம், சின்னசாமி, மல்லிகா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம் ,தொழில், விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை இக்கூட்டம் வரவேற்கிறது. மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது,

பெரும்பாலையில் அகழாய்வு ,தர்மபுரி அகழ்வைப்பகத்தை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 நிதி உதவி செய்யும் திட்டத்தை வரவேற்கும் அதே சமயம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தையும் தொடர வேண்டும்.

கடந்த ஜனவரி 20 அன்று காணொளிக் காட்சி மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய தமிழக முதல்வர் அவர்கள் தர்மபுரியில் சிப்காட் ,ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாவது திட்டம், கோட்டையூர் பாலம், பால் குளிரூட்டும் நிலையம் ஆகிய திட்டங்களை அறிவித்தார்.ஆனால் தமிழக நிதிநிலை அறிக்கையில் இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. இத் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்க வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில் தர்மபுரியில் துவரை சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுதானிய உற்பத்தியில் முன்னணியில் திகழும் இம்மாவட்டத்தில் உற்பத்தியாகும் சாமை, வரகு, கேழ்வரகு, சோளம், கம்பு, நிலக்கடலை போன்ற சிறுதானியங்களை மதிப்புக் கூட்டும் தானியங்களாக மாற்றி, சந்தைப்படுத்திட வேளாண் சார்பு தொழிற்சாலைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட வேண்டும்.பால் உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக விளங்கும் தர்மபுரியில் பால் உற்பத்தியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் .

மார்ச் 30,31, ஏப்ரல் 1 தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ள கட்சியின் மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்திலிருந்து பெரும் திரளாகப் பங்கேற்பது. இதையொட்டி மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தன்று மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் கொடியேற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.

Updated On: 20 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்