/* */

வீட்டிற்கு தீ வைப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

வீட்டிற்கு தீ வைப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

வீட்டிற்கு தீ வைப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X

செய்யாறு அருகே நிலத்தில் மாடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்த மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் பகுதியில் உமையாள்புரம் கிராமத்தில் உள்ள ராஜா என்பவர் நிலத்தில் சுங்குவார்சத்திரம் அடுத்த வாசனை மேடு கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மனைவி அஞ்சலி விவசாயம் செய்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைப்பதாக கூறப்படுகிறது.

இதனை அஞ்சலி கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் காமாட்சி வழக்கம்போல் நேற்று விவசாய நிலத்தில் மாடுகளை கட்டி வைத்துள்ளார்.

இதைப் பார்த்த அஞ்சலி மாடுகளை அவிழ்த்து விட்டு உள்ளார் . இதனால் காமாட்சி மற்றும் அஞ்சலி ஆகியோருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அஞ்சலியிடம், காமாட்சி தகராறு செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

ஆத்திரம் தீராத காமாட்சி நேற்று இரவு மண்ணெண்ணெய் கேனுடன் அஞ்சலி வீட்டுக்கு சென்றுள்ளார் பின்னர் அங்கிருந்த அஞ்சலி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீ உடல் முழுவதும் பரவிய நிலையில் கன்னியப்பன் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இன்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து கன்னியப்பன்,பிரம்ம தேசம் போலீசில் புகார் செய்தார்.

செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து காமாட்சியை தேடி வருகின்றார்.

வீட்டுக்கு தீ வைப்பு-தந்தை-மகன் கைது

வந்தவாசி அருகே விவசாயி வீட்டுக்கு தீ வைத்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 50), விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் நாகலிங்கம் (55). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நாகலிங்கம், அவரது மகன் அன்பரசு (21) ஆகியோர் சேர்ந்து துரையின் கூரை வீட்டை தீ வைத்து எரித்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகலிங்கம், அவரது மகன் அன்பரசு ஆகியோரை கைது செய்து, இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 13 March 2023 10:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!