/* */

தீபத் திருநகரின் முதல் பெண் நகராட்சி தலைவி யார்?

தீபத் திரு நகரின் முதல் பெண் நகராட்சி தலைவி யார்? அக்னித்தலத்தில் அனல் பறக்கும் தேர்தல் கடைசி கட்ட பிரச்சாரம்

HIGHLIGHTS

தீபத் திருநகரின் முதல் பெண் நகராட்சி தலைவி யார்?
X

ஆன்மீகத்தின் தலைநகரம், ஞானிகளும் சித்தர்களும் அவதரித்த புண்ணிய பூமி, பௌர்ணமி கிரிவலம், தீபத்திருவிழா ஆகியவற்றால் உலக அளவில் இந்நகரம் புகழ் பெற்றது திருவண்ணாமலை

அதே சமயம் திராவிட இயக்க அரசியல் வரலாற்றில் திருவண்ணாமலைக்கு எப்போதும் தனித்துவமான இடமுண்டு.

ஆன்மீகமும் அரசியலும் தழைத்தோங்கும் திருவண்ணாமலை நகரின் நகராட்சி தேர்தல் எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது.

திருவண்ணாமலை நகராட்சி 1896 ஆம் ஆண்டு உருவானது. நூற்றாண்டு கடந்து உள்ள திருவண்ணாமலை நகராட்சிக்கு இப்போது வயது 126. கடந்த 1959 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக, 1974 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சி , 1996 ல், தேர்வு நிலை நகராட்சி, 2008 ஆம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக படிப்படியாக தரம் உயர்ந்தது.

திருவண்ணாமலையில் 1,42,460 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியிருக்கிறார்கள்

கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நகராட்சியை நிர்வகித்து வருகின்றனர். திருவண்ணாமலை நகராட்சியின் முதல் நகராட்சி தலைவராக வெற்றி பெற்ற ப. உ.சண்முகம், திராவிட இயக்கத்தின் முதல் நகராட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை நகராட்சியில் 1947க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் 5 முறை திமுகவும், 4 முறை காங்கிரசும், 2 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நகராட்சியின் தலைவராக பதவி வகித்த திமுகவை சேர்ந்த ப. உ. சண்முகம், தமிழக அமைச்சராகவும், தர்மலிங்கம், பட்டுசாமி, முருகையன் ஆகியோர் எம்.பி களாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயராஜ் எம்எல்ஏ வாகவும் பதவி வகித்தனர்

அதேபோல் திருவண்ணாமலை நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த பிச்சாண்டி தமிழக அமைச்சராக இருந்தார். தற்போது பேரவை துணைத்தலைவராக இருக்கிறார்.

தற்போது நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் திமுக நேரடியாக 35 வார்டுகளிலும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும் போட்டியிடுகிறது. அதிமுக 39 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. பாமக 11 வார்டுகளிலும் , தேமுதிக 1 வார்டிலும் போட்டியிடுகிறது.

திமுக தரப்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் கம்பன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்பேத்குமார், ஜோதி, கிரி, சரவணன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், அதிமுக தரப்பில் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் தூசி மோகன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர். இரு தரப்பும் அசுர 'ப'லத்துடன் களத்தில் சுழன்றாலும் பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் சூறாவளி பிரசாரத்தால் சற்றே ஆட்டம் கண்டுள்ளது.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன், இரட்டை இலை சின்னம் என்ற மிகப்பெரிய அஸ்திரம் இருந்தாலும், உள்ளூர்காரர் என்ற முத்திரையுடன் போட்டியிடும் வேட்பாளர்கள் (பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை) பெறும் வாக்குகள், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டு, அதனை தீர்த்து வைப்பதாக கூறி, அவர்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவே பிரதான கட்சியான திமுக – அதிமுகவுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் உட்கட்சி பூசலும், அவர்களுக்கு தலைவலியை அதிகரிக்க செய்துள்ளது.

தாமரையை மலர செய்ய தனித்து களம் காணும் பாஜக, பண பலத்துடன் உள்ள வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதால், ஒரு சில வார்டுகளில் நெருக்கடி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள், தன்னம்பிக்கையுடன் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிகின்றனர்.

குடிநீர், சாலை வசதி, குப்பைகள் அகற்றம், கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பை கிடங்கில் குப்பை அகற்றம், புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், பேருந்து சேவை ஆகிய முக்கிய கோரிக்கைளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருபவர் யார்? என முடிவு செய்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி வசப்படும்.

ஒவ்வொரு வார்டிலும் இறுதிக்கட்ட பிரச்சார நாளான இன்று வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர், எனவே தேர்தல் களம் அனல் பறக்கிறது, வாக்காளர்களின் மனங்களை வென்று அவர்களின் நம்பிக்கையை பெற்று வெல்லப்போவது யார் என்பது வரும் 22ஆம் தேதி தெரியவரும்.

Updated On: 17 Feb 2022 7:41 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு