/* */

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வரும் திங்கட்கிழமை முதல், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மீண்டும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
X

இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள் மனுக்களை பெறாததால் பெட்டியில் மனுக்களை அளித்து வந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை, சமீபத்தில் அறிவித்துள்ள தமிழக அரசு குறைதீர்வு கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Updated On: 1 Oct 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்