/* */

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 5680 மாணவர்களும், 6733 மாணவிகள் என மொத்தம் 12,413 பேர் எழுதினர்

HIGHLIGHTS

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி
X

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் டூ தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 33வது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும் 1.46% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரை தமிழக முழுவதும் பல்வேறு மையங்களில் பள்ளிக் கல்வித்துறை விதித்த கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று இன்று காலை 10 மணியளவில் இணையதளத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வில் 5750 மாணவர்களும் , 6791 மாணவிகள் என 12,541 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அரசு வெளியிட்ட தேர்வு முடிவுகளின் படி காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதியதில் 5680 மாணவர்களும் 6,395 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 455 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 89.08 சதவீதமும் , மாணவிகள் 94.98 சதவீதம் என மொத்தம் 92.28% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழகத்தில் 33 வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1.46 % அதிகரித்துள்ளது.

Updated On: 6 May 2024 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?