திருவண்ணாமலையில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்
X

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி எஸ் ஆர் ஜி டி எஸ் பள்ளி, ஈசானியம் ரோடு, முத்து விநாயகர் கோவில் தெரு சித்த மருத்துவமனை, புதுத்தெரு முஸ்லிம் பள்ளி, டவுன்ஹால் நகராட்சிப் பள்ளி சின்னக்கடை தெரு, பேருந்து நிலையம் அருகில்,

ஆனைகட்டி தெரு குழந்தைகள் நல மையம், அமராவதி முருகையன் பள்ளி ராஜராஜன் தெரு, குழந்தைகள் நல மையம் நகராட்சி ஆரம்பப்பள்ளி மேற்கு கோபுரம், ராமகிருஷ்ணா நர்சரி பள்ளி துர்க்கை அம்மன் கோவில் அருகில்,

டிஎம் கார்மல் பள்ளி பெரியார் சிலை அருகில், சேவியர் பள்ளி கீழாத்தூர், வி.டி.எஸ். மேல்நிலைப்பள்ளி காந்தி நகர், நகராட்சி மகளிர் பள்ளி தேரடி தெரு, சண்முக அரசுப்பள்ளி செங்கம் ரோடு,

நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர், சுல்தான்பேட்டை முஸ்லிம் பள்ளி, கோரிமேடு 5வது தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் கானா நகர், சரஸ்வதி விகாஸ் பள்ளி வேட்டவலம் சாலை, ஆகிய பகுதிகளில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு ,வாக்காளர் அடையாள அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Updated On: 11 Sep 2021 8:10 AM GMT

Related News