/* */

குடியரசு தின விழாவையொட்டி திருவண்ணாமலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

குடியரசு தின விழாவையொட்டி திருவண்ணாமலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு
X

ரோந்து பணியில் போலீசார்.

குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் முருகேஷ் கொடியேற்றுகிறார். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா நடக்கிறது.

இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், அருணாசலேஸ்வரர் கோவில் பகுதிகள், அண்ணாமலையார் கோயில் மாடவீதி , கிரிவலப் பாதை மற்றும் கிரிவலப் பாதைகளில் அமைந்துள்ள ஆசிரமங்கள் அங்கு தங்குபவர்களின் விபரம், வெளிநாட்டவர்களின் வருகை என போலீசார் நேற்று இரவு திருவண்ணாமலை நகர் முழுவதும் பலத்த சோதனையில் ஈடுபட்டனர் .

இந்த நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் மோப்பநாய் மூலம் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். பஸ்களில் ஏறியும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

Updated On: 26 Jan 2023 1:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?