/* */

15 மற்றும் 17ம் தேதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 15 மற்றும் 17ம் தேதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

15 மற்றும் 17ம் தேதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காண 15 ஆம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

நில உரிமையாளர்கள் தங்களின் நீண்டகால நில பட்டா மாறுதல் நில உடைமைப் பதிவுகள் மேம்பாட்டு திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் திருத்தம் மற்றும் நத்தம் நிலவரி திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றில் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து தீர்வுக்கான நாளையும் 17ஆம் தேதியும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள விஏஓ அலுவலகத்தில் நடைபெறும்.

அதில் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற உள்ளனர் , எனவே அந்த கிராமத்துக்கு உட்பட்ட நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள ஆதார ஆவணங்களுடன் மனு அளித்து பயன் பெறலாம்.

அதன்படி நாளை சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள்.

செய்யாறு தாலுகா அனக்காவூர்,

கீழ்பெண்ணாத்தூர் தாலுகா கீக்களுர்,

திருவண்ணாமலை தாலுகா ஆடையூர், வேங்கிக்கால்,,

ஆரணி தாலுகா கண்ணமங்கலம்

சேத்துப்பட்டு தாலுகா கண்ணனூர்,

போளூர் தாலுகா பெரியகரம்,

தண்டராம்பட்டு தாலுகா பெருந்துறை பட்டு, எடக்கல்,

செங்கம் தாலுகா அரட்டவாடி,

கலசப்பாக்கம் தாலுகா கடலாடி,

வந்தவாசி தாலுகா ஜமுனாமரத்தூர், ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

17ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறும் கிராமங்கள்.

செய்யாறு தாலுகா பரமனந்தல் ,

கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அங்குணம்,

திருவண்ணாமலை தாலுகா அரடா பட்டு,

கலசபாக்கம் தாலுகா மேல் பாலூர் ,

வந்தவாசி தாலுகா சென்னா வரம்,

செங்கம் தாலுகா செங்கம் பட்டு ,

போளூர் தாலுகா ஆனந்தபுரம் ,

ஆரணி தாலுகா புத்தூர்

ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

Updated On: 14 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...