/* */

இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை செய்யக்கூடாது!

அக்னி நட்சத்திரம் மே 04ஆம் தொடங்கி மே 29ஆம் தேதி வரை இருக்கும். இந்த நேரத்தில் சில விஷயங்களை செய்யவே கூடாது.

HIGHLIGHTS

இன்று முதல்  அக்னி நட்சத்திரம் தொடக்கம்!  என்ன செய்யலாம்? எதை செய்யக்கூடாது!
X

கோப்புப்படம் 

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 21ஆம் தேதி முதல் வைகாசி 15ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் துவங்கி நடைபெறும். அதேபோல இந்த வருடம் மே மாதம் நான்காம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இருக்கப் போகிறது.

பொதுவாக அக்னி நட்சத்திரம் சமயத்தில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் ஏப்ரல் கடைசியிலும் தற்போது இந்த மாத துவக்கத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கமும் வெப்ப அலையும் பொதுமக்களை விழி பிதுங்க வைக்கிறது.

குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 105 டிகிரி தாண்டி சில நேரங்களில் 108 டிகிரி வரை பதிவாகி வருகிறது.

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பாகவே இப்படி என்றால் இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வருகிற ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட ஒன்பது டிகிரி பாரன்ஹீட் வரைபடம் அதிகரிக்கும் எனவும் சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம் எனவும் எச்சரித்துள்ளது மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் இயல்பை விட வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை மறந்தும் செய்ய கூடாது தெரியுமா?

அக்னி நட்சத்திரம் என்றால் கத்திரி வெயில் காலம். அதாவது எப்போதும் உள்ள வெயிலை விட இந்த காலகட்டத்தில் கூடுதலாக வெயில் அடிக்கும். உஷ்ணம் அதிகமாக இருக்கும். இது மே 04ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 04ஆம் தொடங்கி மே 29ஆம் தேதி வரை இருக்கும். இந்த நேரத்தில் சில விஷயங்களை செய்யவே கூடாது.

மக்களிடையே அக்னி நட்சத்திர காலத்தில் எந்த சுப காரியங்களையும் செய்யக்கூடாது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. உண்மையில் அந்த விஷயம் ஒரு பழங்கால நம்பிக்கையே தவிர இப்போது பின்பற்ற வேண்டியது இல்லை. சில விஷயங்களை பகுத்தறிந்து செய்வதே நல்லது.

முன்புள்ள காலங்களில் மின்சார வசதி ஏதும் கிடையாது. அந்த நேரத்தில் அக்னி நட்சத்திர காலம் மக்களால் சமாளிக்க முடியாததாக இருந்திருக்கும். வெயிலின் தாக்கத்தில் சுப காரியங்களை நடத்தும் போது சிரமங்கள் ஏற்படும் என்பதால் அந்த நேரத்தில் தவிர்த்தனர்.

குடும்பத்தின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அவர் உக்கிரமாக இருக்கும் காலகட்டம் தான் அக்னி நட்சத்திரம். இந்த நேரத்தில் சுப காரியங்களை செய்வது சூரியனின் அருளை பெறுவதில் சிக்கலை உண்டாக்கும். எனவே இந்த காலத்தில் சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என ஜோதிடம் சொல்கிறது. அதேநேரம் சில சுப காரியங்களை அக்னி நட்சத்திரத்தில் செய்யலாம் என ஜோதிடம் அறிவுறுத்துகிறது.

என்ன செய்யலாம்?

வாடகை வீடு மாறுதல், சுபகாரிய பேச்சுவார்த்தை, திருமண விழா, நிச்சயதார்த்தம், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு, பெண் பார்க்க செல்வது, முன்பு கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடிபுகலாம்.

செய்யக் கூடாதவை.

• பூமி பூஜை

• வீடு கட்டும் பணி

• கிணறு வெட்டுவது

• விவசாய விதைப்பு பணிகள்

• மரம் வெட்டுவது

• குழந்தைகளுக்கு மொட்டை போடுதல், காது குத்துதல்

• வீட்டு கிரகப்பிரவேசம்

• பந்தக்காலை நடுவது

• தெய்வ சிலைகள் பிரதிஷ்டை

என இந்த அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என பெரியோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.

Updated On: 4 May 2024 12:03 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  10. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...